முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பங்குச்சந்தையில் என்னுடைய முதலீட்டு வழிமுறைகள்

 பங்குச்சந்தையில் என்னுடைய முதலீட்டு கொள்கை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அமெச்சூர் டென்னிஸ் விளையாட்டு போன்றது. இரண்டிலும் மிகவும் குறைவாக தவறு செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் என்கிறார் சார்லஸ் டி எல்லிஸ் எனும் பிரபல முதலீட்டாளர். அவர் முதலீட்டின் வெற்றியை வெற்றியாளரின் சிறந்த உத்தி மற்றும் செயல்பாடுகள்  தீர்மானிப்பதில்லை. மாறாக முதலீட்டில் வெற்றியாளரின் திறமையை விட தோற்பவர்களின் தவறுகளே முடிவை தீர்மானிக்கின்றன என்கிறார். எனவே அவர் பங்கு முதலீட்டை தோற்பவர்களின் விளையாட்டு என்கிறார்; ஒருவரின் தவறுகளே மற்றவருக்கு வெற்றியை தருகிறது என்கிறார். குறிப்பாக என்னைப்போன்ற சாதாரண முதலீட்டாளருக்கு இது முற்றிலும் உண்மை. குறைந்த நேரம், தொழில்களைப் பற்றிய  நுண்ணறிவு மற்றும் பகுத்தாய்வுத் திறன் இல்லாத சில்லரை முதலீட்டாளராக நாம் தொழில்முறை முதலீட்டாளர்களிடம் போட்டியிடுவது எளிதான காரியம் அல்ல. எல்லோரையும் போலவே நானும் பல தோல்விகளின் மூலம் எனக்கான பாதையை கடினமான வழியில் கற்றுக் கொண்டேன்.  அதில் கற்றுக்கொண்டவற்றை ஒரு முதலீட்டு கட்டமைப்பாக இங்கு பதிவு செய்கிறேன். இதை சாமானியனுக்கான பொ...