வளர்ச்சி மனநிலை வளர்ச்சி நம் வாழ்வின் ஒரு முக்கியமான அம்சம். குழந்தைகள் வளரவில்லை என்றால் நாம் எவ்வளவு வருத்தப்படுகிறோம். குழந்தைகள் வளரவில்லை என்றால் ஏதோ ஒன்று சரி இல்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பெரியவர்களாகிய நாம் வளரவில்லை என்றால் அதை ஏன் எளிதாக புறந்தள்ளுகின்றோம்? வளர்ச்சி என்றால் உடலளவிலும் மனதளவிலும் மட்டும் அல்ல. நமது வாழ்க்கை தரத்தில், நமது திறமைகளில், நமது வேலையில் எல்லாவற்றிலும் வளர்ச்சி மிகவும் முக்கியம். ஆனால் படித்து ஒரு வேலை கிடைத்ததும் நாம் வளர்ந்துவிட்டதாகவும் மேலும் வளர தேவையில்லை என நினைக்கின்றோம். நம் நண்பர்கள் உறவினர்கள் எத்தனை பேர் அதே வேலையை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்கள் வருமானம் வளரவில்லை என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்து வருவதற்கான காரணம் என்ன? ஒரு வயதிற்கு பிறகு இருக்கும் வாழ்க்கையில் திருப்தி அடைந்து வளர மறந்துவிடுகிறோம். ஒருவேளை பள்ளியில் நடப்பதை போல் யாரும் நம்மை உந்துவதில்லை, கட்டளையிட்டு வேலை வாங்குவதில்லை என்பதால் இருக்கலாம். இல்லை அவசர வாழ்க்கைமுறை, பல கஷ்டங்கள், மற்றும் உந்துதல் இல்லாமையினால் இருக்கலாம்...
தனிநபர் நிதிக்கொள்கைகள் - இந்த வலைப்பதிவு நிதி சுதந்திரத்தை பற்றிய எனது தேடல் மற்றும் அதை நோக்கிய எனது பயணத்திலிருந்து நான் கற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய நமது முதலாளித்துவ சமூகத்தில் பணம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய எனது கருத்துகளின் தொகுப்பு இந்த வலைப்பதிவு