முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூட்டு வட்டியின் மகத்துவம்

கூட்டு வட்டி என்றால் என்ன? சாதாரண வட்டி என்பது அசல் தொகைக்கான வட்டி மட்டுமே. அதுவே கூட்டு வட்டி என்பது வட்டிக்கான வட்டி. அசல் தொகையுடன் அதற்கான வட்டியையும் சேர்த்து வட்டி கணக்கிடப்படும். கூட்டு வட்டியின் சக்தியை உணர்த்தும் ஒரு சிறிய கதையை பார்ப்போம். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு புலவர் மன்னனை புகழ்ந்து பாடி பரிசு பெற எண்ணுகிறார். அவ்வாறு அவர் பாடிய பாடலை கேட்டு மகிழ்ந்து என்ன பரிசு வேண்டும் என மன்னர் கேட்கிறார். அதற்கு புலவர் சதுரங்க பலகையில் முதல் கட்டத்தில் ஒரு நெல்மணியும் இரண்டாவது கட்டத்தில் இரண்டு நெல்மணியும் அதற்கு அடுத்த கட்டத்தில் முந்தைய கட்டத்தை போல் இரண்டு மடங்கு நெல்மணியுமாக மொத்தம் 64 கட்டங்களுக்கு நெல்மணிகளை கொடுத்தால் போதும் என்கிறார்.  இதை கேட்ட அரசர் கூட்டு வட்டியின் சக்தியை புரிந்து கொள்ளாமல் அது மட்டும் போதுமா என்று புலவரை கேட்கிறார். புலவர் தான் கேட்டதைப்போல் நெல் கொடுத்தால் போதும் என்கிறார். புலவர் பிழைக்க தெரியாதவர் என்று மன்னனும் பிற அமைச்சர்களும் எண்ணுகின்றனர். சில நாட்கள் கழித்து அமைச்சர் புலவர் கேட்டபடி கொடுக்க நெல் நமது நாட்டிலேயே இல்லை என்கிறார். புலவர் ...

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் - ஜார்ஜ் எஸ். க்லேசன் - புத்தக சுறுக்கம் 1926 ல் எழுதப்பட்ட இந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் நடக்கும் நிகழ்வுகளை உவமையாகக் கொண்டு நிதி ஆலோசனைகளை வழங்குகிறது. இன்றளவும் தனிநபர் நிதிக்கொள்கையின் உன்னதமான புத்தகமாக கருதப்படுகிறது.   இதில் உள்ள ஆலோசனைகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்  இருந்ததைப்போல இன்றைய காலகட்டத்திற்கும் முற்றிலும் ஏற்றயே. எக்காலத்திலும் செல்வத்தை வரையறுக்கும் கொள்கைகளை எளிதாக விளக்கும் இந்த புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பணத்தை கையகப்படுத்தும் எளிய விதிகளை புரிந்து கொள்பவர்களிடம் பணம் ஏராளம் சேர்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வளமான பாபிலோனில் பணத்தை கட்டுப்படுத்திய அதே விதிகள் இன்றும் பணத்தை இயங்குகின்றன. 1. நீங்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியை உங்களுக்கென்று ஒதுக்குங்கள். அது உங்கள் ஊதியத்தில் பத்து சதவிகத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.  ஏன்? என் வருமானம் எல்லாம் எனக்குதானே? ஒரு பகுதி மட்டும் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? நம் வருமானத்தில் வாடகை கொடுக்கிறோம், காய்கறி, மளிகை கடை என எல்...

பணம் எவ்வாறு செயல்படுகிறது?

பணம் என்றால் என்ன? பணம் என்பது இரு நபர்களுக்கு இடையே நடக்கும் மதிப்பு பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகம். மேலும் மதிப்பை சேர்த்து வைக்கும் பெட்டகம் ஆகும்.  பணம் என்பது மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் சேவைகள் முதலியவற்றை பரிமாறிக்கொள்ள ஒரு அரசால் உறுதியளிக்கப்பட்ட அலகு ஆகும். பணத்திற்கு என்று தனியாக மதிப்பு கிடையாது. மக்களுக்கு அரசின் மீதிருக்கும் நம்பிக்கையே பணத்திற்கு மதிப்பை அளிக்கிறது.  முற்காலத்தில் மனிதர்கள் தங்களுக்குள் பொருட்களை பரிமாறி கொள்ள பண்டமாற்று முறையை பயன்படுத்தினர். அதில் பல சிக்கல்கள் இருந்தன. பின்னர் உப்பு, சிப்பி போன்றவற்றை பணத்தை போல் பயன்படுத்தினர். பின்னர் கிமு 600 களில் நாணயங்கள் புழக்ககத்திற்கு வந்தன. தமிழ்நாட்டிலும் பாண்டியர்கள் காலத்தில் பயன்படுத்திய உலோகத்திலான நாணயங்கள் கிடைத்துள்ளன. முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயங்கள் அதன் எடைக்கு ஈடாக மதிப்பிடப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் நீட்சியாக பார்க்கலாம்.  அதற்கு பின்னர் அரசாங்கங்கள்  உலோகங்களை ந...

பங்குகள் - ஓர் அடிப்படைப் பார்வை

பங்குகள் என்றால் என்ன? நிறுவனங்கள் எதற்காக பங்குகளை வெளியிடுகிறார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்? பங்குகளை வாங்குவதால் நமக்கு என்ன பயன்? பங்குகளைப்பற்றி தெரிந்து கொள்ளும்முன் ஒரு தொழிலை தொடங்குவதை பற்றியும் அதற்கான மூலதனத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தொழில்முனைவோரிடம் ஒரு சிறந்த வணிக யோசனை இருக்கிறது எண்ணிக்கொள்வோம். உதாரணமாக ஆர்கானிக் முறையில் மரச்செக்கில் எண்ணெய் தயாரிப்பது என்று எடுத்து கொள்வோம். இந்நாளில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களுக்கு நல்ல தேவை இருப்பதாலும் தன்னால் உயர்தர எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும் தன்னுடைய வணிகம் கட்டாயம் வெற்றி பெறும் என்று நம்புகிறார். ஆனால் அவரிடம் தொழில் தொடங்க பணம் இல்லை. அவருக்கான வழிகள் என்ன? உறவினர்களிடம் நண்பர்களிடம் கடன் பெறலாம். ஒரு வங்கியில் கடன் பெறலாம். அதற்கு அவருடைய சொத்தை அடமானம் வைக்க வேண்டும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் கடனுக்கான வட்டியை கட்ட வேண்டும். வேறு என்ன வழி உள்ளது? தொழிலில் பிறருக்கு பங்கு அளிப்பது. அவர் தம் இரு நண்பர்களிடம் பேசி தன் தொழிலில் அவர்களை முதலீடு செய்ய ஒப...

பங்குச்சந்தை அடிப்படைகள்

பங்குச்சந்தை   என்றால்   என்ன ? நம்மில்   எத்தனை   பேருக்கு   பங்குச்சந்தையை   பற்றிய   அறிவோ   நேரடி   அனுபவமோ   உள்ளது ?  நான்   பங்குகளில்   நேரடியாக   முதலீடு   செய்வதற்கு   முன்   தொலைக்காட்சி   செய்தியின்   இறுதியில்   இன்று   சென்செக்ஸ்   இத்தனை   புள்ளிகள்   உயர்ந்தது   இவ்வளவு   சரிந்தது   என்று   கேட்டதோடு   சரி   அதை   பற்றி   சிந்தக்கவோ   தெரிந்து   கொள்ளவோ   நினைக்கவில்லை .  ஏனெனில்   நம்மைப்போன்ற   நடுத்தர   மக்களின்   பார்வையில்   பங்குச்சந்தை   என்பது   ஒரு   சூதாட்டம் .  நான்   வேலைக்கு   சென்ற   பிறகு   முதலீட்டை   பற்றி   படிக்க   படிக்க   நாளடைவில்   பங்குச்சந்தை   பற்றிய   என்னுடைய   புரிதல்   தலைகீழாக   மாறியது .  வாரன்   பஃபெட்   கூறியதுபோல்   ஆபத்து ...