முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பங்குச்சந்தையில் என்னுடைய முதலீட்டு வழிமுறைகள்

 பங்குச்சந்தையில் என்னுடைய முதலீட்டு கொள்கை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அமெச்சூர் டென்னிஸ் விளையாட்டு போன்றது. இரண்டிலும் மிகவும் குறைவாக தவறு செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் என்கிறார் சார்லஸ் டி எல்லிஸ் எனும் பிரபல முதலீட்டாளர். அவர் முதலீட்டின் வெற்றியை வெற்றியாளரின் சிறந்த உத்தி மற்றும் செயல்பாடுகள்  தீர்மானிப்பதில்லை. மாறாக முதலீட்டில் வெற்றியாளரின் திறமையை விட தோற்பவர்களின் தவறுகளே முடிவை தீர்மானிக்கின்றன என்கிறார். எனவே அவர் பங்கு முதலீட்டை தோற்பவர்களின் விளையாட்டு என்கிறார்; ஒருவரின் தவறுகளே மற்றவருக்கு வெற்றியை தருகிறது என்கிறார். குறிப்பாக என்னைப்போன்ற சாதாரண முதலீட்டாளருக்கு இது முற்றிலும் உண்மை. குறைந்த நேரம், தொழில்களைப் பற்றிய  நுண்ணறிவு மற்றும் பகுத்தாய்வுத் திறன் இல்லாத சில்லரை முதலீட்டாளராக நாம் தொழில்முறை முதலீட்டாளர்களிடம் போட்டியிடுவது எளிதான காரியம் அல்ல. எல்லோரையும் போலவே நானும் பல தோல்விகளின் மூலம் எனக்கான பாதையை கடினமான வழியில் கற்றுக் கொண்டேன்.  அதில் கற்றுக்கொண்டவற்றை ஒரு முதலீட்டு கட்டமைப்பாக இங்கு பதிவு செய்கிறேன். இதை சாமானியனுக்கான பொ...
சமீபத்திய இடுகைகள்

COMMON SENSE INVESTING

 Common sense investing. Simplicity is the ultimate sophistication - Leonardo da Vinci. Investing legend Charles D Ellis said the process of investment is like a game of amateur tennis, where the winner is the one who makes the fewest mistakes.  In investing, outcomes are determined not by the great strategy and exceptional execution by the winner. Rather, they are the result of losers’ mistakes rather than the winner’s proficiency.  He says the investment process can be termed as a “loser’s game” in which mistakes and unforced errors can cause investors t o fall behind their peers. This is especially true for an amateur investor like me. As a retail investor who has less time, domain knowledge and analytical capabilities, competing  with professional investors is not an easy task. Like anyone else i have learnt my lessons the hard way in the market. As my inversing thought process evolved over last few years, i will try to put my investing thought process into a fra...

வளர்ச்சி மனநிலை

  வளர்ச்சி மனநிலை வளர்ச்சி நம் வாழ்வின் ஒரு முக்கியமான அம்சம். குழந்தைகள் வளரவில்லை என்றால் நாம் எவ்வளவு வருத்தப்படுகிறோம். குழந்தைகள் வளரவில்லை என்றால் ஏதோ ஒன்று சரி இல்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பெரியவர்களாகிய நாம் வளரவில்லை என்றால் அதை ஏன் எளிதாக புறந்தள்ளுகின்றோம்? வளர்ச்சி என்றால் உடலளவிலும் மனதளவிலும் மட்டும் அல்ல. நமது வாழ்க்கை தரத்தில், நமது திறமைகளில், நமது வேலையில் எல்லாவற்றிலும் வளர்ச்சி மிகவும் முக்கியம். ஆனால் படித்து ஒரு வேலை கிடைத்ததும் நாம் வளர்ந்துவிட்டதாகவும் மேலும் வளர தேவையில்லை என நினைக்கின்றோம்.  நம் நண்பர்கள் உறவினர்கள் எத்தனை பேர் அதே வேலையை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்கள் வருமானம் வளரவில்லை என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்து வருவதற்கான காரணம் என்ன? ஒரு வயதிற்கு பிறகு இருக்கும் வாழ்க்கையில் திருப்தி அடைந்து வளர மறந்துவிடுகிறோம். ஒருவேளை பள்ளியில் நடப்பதை போல் யாரும் நம்மை உந்துவதில்லை, கட்டளையிட்டு வேலை வாங்குவதில்லை என்பதால் இருக்கலாம். இல்லை அவசர வாழ்க்கைமுறை, பல கஷ்டங்கள், மற்றும் உந்துதல் இல்லாமையினால் இருக்கலாம்...

பணக்கார தந்தையின் பணப்புழக்க கட்டம் - புத்தக சுறுக்கம்

  பணக்கார தந்தையின் பணப்புழக்க கட்டம் - புத்தக சுறுக்கம்.  பணப்புழக்க கட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. நமது வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை பொறுத்து நாம் எந்த கட்டத்தில் உள்ளோம் என்பதை அறியலாம். சிலருக்கு பல கட்டங்களில் இருந்தும் வருமானம் வரலாம். ஒவ்வொரு கட்டத்திற்கும் தனித்தனி மனநிலை,  வெவ்வேறு திறன்கள், வெவ்வேறு படிப்புகள் தேவைப்படும். அந்த நான்கு கட்டங்களிலும் பணக்காரராக முடியும். ஆனால் சில கட்டங்களில் வேகமாக பணம் சம்பாதிக்க முடியும். அந்த கட்டங்களை பார்க்கலாம் வாங்க. இவையே அந்த நான்கு பணப்புழக்க கட்டங்கள். இடப்பக்கம் மேலே Employee அதாவது ஊழியர். இடப்பக்கம் கீழே Self employed அதாவது சுயதொழில் அல்லது சிறிய தொழில் புரிவோர் அல்லது Professional. வலப்பக்கம் மேலே பெரிய தொழில் செய்வோர். வலப்பக்கம் கீழே முதலீட்டாளர். முதலில் ஊழியரைப் பார்க்கலாம் வாங்க. நம் சிறுவயது முதலே நமக்கு சொல்லி தந்தது நன்றாக படி, நல்ல பாதுகாப்பான வேலைக்கு போ, நல்ல சம்பளம் கிடைக்கும், கூடவே பல சலுகைகள். இங்கு பாதுகாப்பின்மை பயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் பணத்தை விட பாதுகாப்பே முக்கியமாக கருதுகின்ற...

பணக்கார தந்தை ஏழை தந்தை - புத்தக சுறுக்கம்

  பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோசாகி 1997 இல் அமெரிக்க முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி என்பவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம் பணத்தை பற்றிய மக்களின் எண்ணங்களை மாற்றி அமைத்தது. அவரது பணத்தை பற்றிய புரிதல் வழக்கமான சிந்தனைக்கு எதிரானது. பணக்கார தந்தை ஏழைத் தந்தை - பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை பற்றி நடுத்தர மற்றும் ஏழைகள் சொல்லிக்கொடுக்காத எதை கற்றுக் கொடுக்கிறார்கள்?  ராபர்ட்டுக்கு இரண்டு அப்பாக்கள். ஒருவர் பெற்றவர். அவரே ஏழைத்தந்தை. இன்னொருவர் நண்பனின் அப்பா. பணவிடயங்களில் இவரது ஆசான். இவரே பணக்கார தந்தை. இவ்விரு தந்தைகளுக்கும் பணத்தை பற்றிய எதிர்எதிர் புரிதல்கள் சிந்தனைகள்.  ஏழை தந்தை பல்வேறு கல்லூரிகளில் நன்கு  படித்தவர். இன்னொருவர் 8 வது முடிக்கவில்லை. அவரது தந்தை கல்லூரியில் பணிபரிகிறார். இன்னொருவர் தொழில் முனைவோர். இருவரும் தம் துறைகளில் திறமையானவர்கள், உழைப்பாளிகள், நல்ல வருவாய் உள்ளவர்கள். ஆயினும் ஏழைத்தந்தை ஏழையாகவே கடனில் இறந்தார். இன்னொருவர் ஹவாய் தீவின் மிகப்பெரிய பணக்காரராக இறந்தார். எப்படி? இருவருக்குமான பணத்தை பற்றிய புரிதல் வேறு. ஒருவ...

பணம் உண்மையிலேயே எல்லா தீமைகளுக்கும் மூல காரணமா?

சிறுவயது முதல் பணம்தான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணம் என்று நம் சமூகம் சொல்லி வளர்க்கிறது . பணத்தை பற்றி பேசுவது ஆசைப்படுவது எல்லாம் தவறு என்று நம் மனதில் திணிக்கப்படுகிறது . மற்றவரை ஏய்த்து மோசடி செய்தால் மட்டுமே செல்வந்தராக முடியும் என்றும் நியாயமான முறையில் பணக்காரராக முடியாது என்றும் நாமும் நம்புகிறோம் . இது உண்மையா ?   காற்றை பற்றி சிந்தியுங்கள் . இவ்வுலகில் ஏராளம் உள்ளது . ஒவ்வொரு நொடியும் நாம் காற்றை சுவாசிக்கின்றோம் . ஆனால் . நமக்கு காற்று எளிதில் கிடைப்பதால் அதை பற்றி எப்போதும் சிந்திப்பதில்லை . அதுவே நீங்கள் நீரில் மூழ்கினால் காற்றை பற்றி மட்டுமே சிந்திப்பீர்கள் . பணமும் அதை போலத்தான் .  நம்முடைய தேவைகளுக்கான பணம் நம்மிடம் இல்லாதபோது பணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க நேரிடும் . அந்த நேரத்தில் பணமே நமது மனதை முழுவதும் ஆக்கிரமிக்கிறது . பணமின்மை மற்ற விடயங்களில் கவனம் செலுத்துவதற்கான திறனை கட்டுப்படுத்துகிறது . பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தும் சுதந்திரத்தை பணம் நமக்கு அளிக்கிறது ...